தமிழகம்

தமிழகத்தில் உச்சம் தொட்ட கொரோனா பலி எண்ணிக்கை..! இன்று மட்டும் இம்புட்டு இறப்பு, பாதிப்பு..! முழு விவரம் உள்ளே..!

Summary:

Corona virus Tamil Nadu latest update result

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 4,538 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தமிழா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

 உலகம் முழுவதும் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் தமிழகத்திலும் படுதீவிரமாக பரவிவருகிறது.  தற்போதுவரை தமிழகத்தில் 1,60,907 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் இன்றும் மட்டும் 4,538 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போதுவரை 2,315 ஆக உள்ளது. இன்று மட்டும் 79 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். அதேபோல் 1,10,807 பேர் இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யபட்டுள்ளனர்.

சென்னையை பொருவரை இதுவரை 83,377 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் இன்று ஒரே நாளில் 1,243 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Advertisement