தமிழகத்தில் ஒரே நாளில் இவ்வளவு மரணம்.! தமிழகத்தில் தலைவிரித்தாடும் கொரோனா..! முழு விவரம்.!

தமிழகத்தில் ஒரே நாளில் இவ்வளவு மரணம்.! தமிழகத்தில் தலைவிரித்தாடும் கொரோனா..! முழு விவரம்.!


corona-todays-death-count-in-tamil-nadu

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,175 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் தமிழகத்திலும் தீவிரமடைந்துள்ளது. தமிழகத்தில் நாள்தோறும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் இன்றுமட்டும் புதிதாக 5,175 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

corona

முன் எபோதும் இல்லாத வகையில் இன்று மட்டும் ஒரே நாளில் 112 பேர் (அரசு மருத்துவமனை -84, தனியார் மருத்துவமனை - 28) கொரோனாவால் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் மொத்த கொரோனா பலி எண்ணிக்கை 4,461 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் தற்போதுவரை 2,73,460 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 2,14,815 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இன்றைய தேதியில் தமிழகத்தில் தற்போது 54,184 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.