அதிகரிக்க தொடங்கிய டிஸ்சார்ஜ் எண்ணிக்கை..! குறைய தொடங்கிய கொரோனா இறப்பு..! இன்றைய கொரோனா நிலவரம்..!
தமிழகத்தில் இன்று புதிதாக 5,975 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவ தொடங்கியதில் இருந்து அன்றாட கொரோனா நிலவரம், பாதிப்பு எண்ணிக்கை குறித்த விவரங்களை தமிழக அரசு நாள்தோறும் அறிவித்துவருகிறது. அந்த வகையில் இன்று வெளியான தகவலின்படி தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 5,975 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 1,298 பேருக்கு இன்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,79,385 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவால் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 97 பேர் (அரசு மருத்துவமனை -76, தனியார் மருத்துவமனை - 21) உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, தமிழகத்தில் கொரோனாவால் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 6,517 ஆக உயர்ந்துள்ளது.
இன்று சற்று ஆறுதலாக ஒரே நாளில் 6,047 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,19,327 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி 53,541 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.