இன்று மட்டும் இவ்வளவு பாதிப்பு..? தமிழகத்தில் தலைவிரித்தாடும் கொரோனா..! ஒரே நாளில் 110 பேர் மரணம்..!

இன்று மட்டும் இவ்வளவு பாதிப்பு..? தமிழகத்தில் தலைவிரித்தாடும் கொரோனா..! ஒரே நாளில் 110 பேர் மரணம்..!


Corona tamilnadu todays update

தமிழகத்தில் தொடர்ச்சியாக நான்காவது நாளாக ஒரே நாளில் பலியானவர்களின் எண்ணிக்கை 100 கும் அதிகமாக உள்ளது.

சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இந்தியாவிலும், அதுவும் தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகவே உள்ளது.

corona

கொரோனாவால் தமிழகத்தில் 2,79,144 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் இன்றுமட்டும் புதிதாக 5,684 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இன்று மட்டும் கொரோனா பாதித்த 110 பேர் உயிரிழந்துள்ளனர். அதில், 22 பேர் தனியார் மருத்துவமனையிலும், 88 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர்.

இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4571 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் குணமானோர் எண்ணிக்கை 221,087 ஆக உயர்ந்துள்ளது.