பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்ததும் திவாகர் வெளியிட்ட அதிர்ச்சி காணொளி...
கண்கலங்க வைக்கும் இறப்பு எண்ணிக்கை..! இன்றுமட்டும் தமிழகத்தில் எவ்வளவு கொரோனா பாதிப்பு தெரியுமா.?
தமிழகத்தில் இன்று புதிதாக 5,994 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவ தொடங்கியதில் இருந்து நாள்தோறும் கொரோனா நிலவரம் குறித்து தமிழக சுகாதாரத்துறை விவரங்களை வெளியிட்டுவருகிறது. அந்தவகையில் தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 5,994 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் இன்று 989 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்தம் எண்ணிக்கை 2,96,901 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மொத்த பாதிப்பு 1,09,117 ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல் இன்றைய தேதியில் அரசு மருத்துவமனையில் 85 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 34 பேரும் உயிரிழந்தநிலையில் தமிழகத்தில் இன்றைய கொரோனா இறப்பு எண்ணிக்கை 119 ஆகும். இதன்மூலம் தமிழகத்தில் மொத்த உயிரிழப்பு 4,927 ஆக உயர்ந்துள்ளது.
இன்று சற்று ஆறுதலாக 6,020 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 2,38,638 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய தேதியில் 52,759 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.