அரசியல் தமிழகம் Covid-19

தமிழக முதலமைச்சருக்கு நேற்று நடந்த கொரோனா பரிசோதனை! இன்று வெளியான பரிசோதனை முடிவு!

Summary:

Corona result to Cm

கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொடூர வைரஸானது தமிழகத்திலும் நாளுக்கு நாள் அதிகரித்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. ஆனாலும் சற்று மகிழ்ச்சியளிக்கும் விதமாக குணமடைவோரின் எண்ணிக்கையும் சற்று உயர்ந்துள்ளது. 

கொரோனா வைரஸால் மருத்துவப்பணியாளர்கள், காவல்துறையினர், அரசியல்வாதிகள் என பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அமைச்சர்கள் தங்கமணி, செல்லூர் ராஜூ, கே.பி.அன்பழகன் உள்ளிட்டோர் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது அலுவலகத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நேற்று கொரோனா பரிசோதனை நடத்தது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நேற்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும், அவருக்கு தொற்று இல்லை என பரிசோதனை முடிவு வந்திருப்பதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அதேபோல், முதலமைச்சரின் முகாம் அலுவலகத்தில் பணிபுரியும் எவருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பதும் உறுதிசெய்யப்பட்டதாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Advertisement