மக்களே ரெடியா.? ரேஷனில் இன்றுமுதல் 2-வது தவணை ரூ.2000.! இதனை செய்தால் கடும் நடவடிக்கை.!

மக்களே ரெடியா.? ரேஷனில் இன்றுமுதல் 2-வது தவணை ரூ.2000.! இதனை செய்தால் கடும் நடவடிக்கை.!


Corona relief 2nd installment

மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்றதும், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.4 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவியை வழங்குவதற்கான கோப்பில் கையெழுத்திட்டார். அந்தத் தொகையை ரூ.2 ஆயிரம் வீதம் இரண்டு தவணைகளாக வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார். ரேசன் அரிசி அட்டைதாரர்களுக்கு ஏற்கனவே முதல் தவணை ரூ.2000 வழங்கப்பட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து கொரோனா நிவாரண நிதி 2-வது தவணை ரூபாய் 2000 மற்றும் 14 வகையான மளிகைப் பொருட்கள் கொடுப்பதற்கான டோக்கன் நேற்று 14ஆம் தேதி வரை வழங்கப்பட்டது. இதனையடுத்து இன்று 15ஆம் தேதி முதல் ரூபாய் 2000 மற்றும் 14 வகை மளிகை பொருட்கள் வழங்கும் பணி தொடங்கும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது

Corona relief
ஜூன் 15-ந்தேதி முதல் இந்த மாத இறுதிவரை அவற்றை பெற்றுக்கொள்ளலாம். அவற்றை பெறும்போது ரேஷன் கடைகளில் சமூக இடைவெளியை பின்பற்றி முக கவசம் அணிந்து பெற்றுக்கொள்ள வேண்டும். ரூ.2 ஆயிரம் நிவாரண உதவி மற்றும் 14 மளிகை பொருட்கள் அடங்கிய பை ஆகியவை முறையாக வழங்கப்படுகிறதா? என்பது மாவட்ட ஆட்சியரின் தலைமையில் கண்காணிக்கப்படும். 14 மளிகை பொருட்களை வெளிச்சந்தையில் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.