மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைக்கப்பட்ட குழு.! முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு முக்கிய இடம்.!

மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைக்கப்பட்ட குழு.! முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு முக்கிய இடம்.!



corona-prevention-advisory-committee-in-tamilnadu


தமிழக அரசு கொரோனா எதிர்ப்பு நடவடிக்கையின் ஒரு படியாக கடந்த சில தினங்களுக்கு முன்னதாக அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. அனைத்து கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படி 13 கட்சிகளை கொண்ட ஆலோசனை குழு அமைக்கப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள அரசின் ஆலோசனை குழுவில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உட்பட 13 கட்சிகளை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

திமுக., அதிமுக, காங்., மதிமுக, விசிக, பாமக, பா.ஜ.க, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட 13 கட்சிகளின் சார்பில் தலா ஒரு எம்.எல்.ஏக்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலோசனைக்குழு கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவது குறித்து அவ்வவப்போது கூடி ஆலோசனை வழங்கும் என கூறப்படுகிறது.

ஆலோசனைக் குழு உறுப்பினர்கள்:

1. திமுக - மருத்துவர் நா.எழிலன்
2. அதிமுக -  மருத்துவர் சி.விஜய பாஸ்கர்
3. காங்கிரஸ் -  திரு.ஏ.எம். முனிரத்தினம்
4. பாமக - திரு. ஜி.கே. மணி
5. பாஜக - திரு. நயினார் நாகேந்திரன்
6. மதிமுக - மருத்துவர் தி.சதன் திருமலைக்குமார்
7. விசிக - திரு. எஸ்.எஸ்.பாலாஜி
8. மா.,கம்யூனிஸ்ட்  - திரு.வி.பி. நாகை மாலி
9.  கம்யூனிஸ்ட்  - திரு. தி.ராமசந்திரன்
10. மமக -  முனைவர் ஜவாஹிருல்லா
11. கொமதேக - திரு.ரா.ஈஸ்வரன்
12. தவாக - திரு.தி.வேல்முருகன்
13. புரட்சி பாரதம் - பூவை திரு.ஜெகன் மூர்த்தி