தமிழகம் Covid-19

இரண்டாவது நாளாக கொரோனா நோயாளி மருத்துவமனையில் தற்கொலை! அதிர்ச்சி தகவல்!

Summary:

Corona patient suicide

உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொடூர வைரஸானது இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இதன் காரணமாக இந்தியாவில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த நான்காவது கட்டமாக ஊரடங்கு உத்தரவு நீடிக்கபட்டுள்ளது.

தமிழகத்தில் சென்னையில் மட்டும் நாளுக்கு நாள் அதிகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் நேற்று மட்டும்  கொரோனாவால் 646 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,728 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளவர்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்துள்ளது. சென்னையில் 50 வயது நபர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.  இதனை அடுத்து அவர் நேற்று மதியம் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று அவரது அறையில் யாரும் இல்லாத நிலையில், திடீரென அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இன்றும் அதுபோல் ஒருவர்  தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஓமாந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 57 வயதான நபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.


Advertisement