தமிழகம்

பரோட்டா வாங்குவதற்காக சுவர் ஏறி குதித்த கொரோனா நோயாளி..! கொரோனா வார்டில் பரபரப்பு..! அதிர்ச்சியடைந்த அதிகாரிகள்.!

Summary:

Corona patient jumping wall and went for buying parotta

கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டிருந்த கொரோனா நோயாளி ஒருவர் சுவர் ஏறிக்குதித்து பரோட்டா வாங்க சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் பகுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் அரசுமருத்துவமனையில் இடம் இல்லாத நிலையில் அருகில் உள்ள தனியார் பள்ளி வளாகம் ஒன்றில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கொரோனா முகாமில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றுவந்துள்ளார்.

இந்நிலையில் அந்த நபர் பள்ளியை ஒட்டியுள்ள வீட்டின் சுவர் ஒன்றின்மீது ஏறிக்குதித்து வெளியே சென்றுவந்ததது சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது. இந்த காட்சியைபார்த்த அதிகாரிகள் அதிர்ச்சியடைந்த நிலையில், இதுகுறித்து சம்மந்தப்பட்ட நோயாளியிடம் விசாரித்தபோது அவர் கூறியதை கேட்டு அதிகாரிகள் மேலும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சுவர் ஏறி குதித்து அருகில் இருந்த கடைக்கு சென்று புரோட்டா வாங்கி வந்ததாக அந்த கொரோனா நோயாளி கூறியுள்ளார். இதனை அடுத்து அந்த ஹோட்டல் மூடப்பட்டநிலையில், கடையின் உரிமையாளர் மற்றும் சிலரை தனிமைப்படுத்த சுகாதாரத் துறையினர் முடிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement