தமிழகம் Covid-19

இன்றுமட்டும் தமிழகத்தில் கொரோனாவுக்கு இத்தனை பேர் பாதிப்பா..? மொத்த பாதிப்பு எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா.?

Summary:

Corona latest update in Tamil Nadu

தமிழகத்தில் இன்று மேலும் 6,993 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவிவருகிறது. குறிப்பாக இந்தியாவில் அதிலும் தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் அதிக அளவில் உள்ளது. கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தினமும் 6 ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் இன்றுமட்டும் புதிதாக 6,993 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,20,716 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 77 பேர் உயிரிழந்துள்ளநிலையில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 3,571 ஆக அதிகரித்துள்ளது.


Advertisement