
தமிழகத்தில் இன்றும் மட்டும் புதிதாக 695 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக
தமிழகத்தில் இன்றும் மட்டும் புதிதாக 695 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, தமிழகத்தில் இன்று மேலும் புதிதாக 695 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 271 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 8,58,967 ஆக உயர்ந்துள்ளது.
இன்றுமட்டும் நான்கு பேர் கொரோனாவால் உயிரிழந்ததை அடுத்து தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,543 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா கட்டுக்குள் இருந்தநிலையில் தற்போது மீண்டும் அதிகரித்துவருவது மக்களிடையே சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement
Advertisement