தமிழகம் Covid-19

தமிழகத்தில் நாள்தோறும் புதிய உச்சத்தில் கொரோனா! இன்று ஒருநாள் மட்டும் கொரோனா பாதிப்பு எவ்வளவு?

Summary:

corona increased in tamilnadu

கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா அதிகமாக பரவி வரும் நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,940 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82,275 உயர்ந்து உள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு ஒரே நாளில் 54 பேர் உயிரிழந்துள்ளனர்.  இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 1,079 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று கொரோனா தொற்றால் 1992 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 53,762 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் தொடர்ந்து 4வது நாளாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,500க்கும்  கூடுதலாக சென்றுள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 1443 பேர் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தனர்.


Advertisement