தமிழகம் Covid-19

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,549 பேருக்கு கொரோனா பாதிப்பு! சென்னையில் மட்டும் எவ்வளவு தெரியுமா?

Summary:

corona increased in tamilnadu

கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொடூர வைரஸானது இந்தியாவிலும் தீவிரமாக பரவி வருகிறது. மேலும் நாளுக்கு நாள் பலியானவர்களின் எண்ணிக்கை மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 

தமிழகத்திலும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் இன்று புதிதாக 4,549 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த  நிலையில் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,56,369 ஆக உயர்ந்துள்ளது.

மகிழ்ச்சியளிக்கும் விதமாக இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 5,106 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஒட்டு மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கையானது 1,07,416 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனாவால் 69 பேர் மரணம் அடைந்துள்ளனர். ஒட்டு மொத்த உயிரிழப்பு 2,236 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 46,714 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் இன்று கொரோனா பாதிக்கப்பட்ட 4,549 பேரில் 1,157 பேர் சென்னையை சேர்ந்தவர்களாவார்கள். இந்தநிலையில், சென்னையில் ஒட்டு மொத்த கொரோனா பாதிப்பு 82,128 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை சென்னையில் மட்டும் 1,341 பேர் உயிரிழந்துள்ளனர்.


Advertisement