தமிழகம் Covid-19

தமிழகத்தில் கடந்த 10 நாட்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை எவ்வளவு.? வெளியான அதிர்ச்சி தகவல்!

Summary:

Corona increased in tamilnadu

சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொடூர வைரஸின் பரவல் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இந்த நிலையில், கொரோனா காரணமாக இந்தியாவில் மே 17ஆம் தேதி வரை மூன்றாவது கட்டமாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இன்றளவும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. இந்த நிலையில் மத்திய மாநில அரசுகள் இந்த கொடூர வைரஸின் பரவலை தடுக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்திலே சென்னையில்தான் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், இந்த கொடூர வைரசால் பலியானவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 6 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது. கொரோனா பாதிப்பு தொடங்கிய மார்ச் 7-ந்தேதியில் இருந்து ஏப்ரல் மாதம் 30-ந்தேதி வரை 2,323 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 10 நாட்களில் 5,245 பேர் பாதிக்கப்பட்டு 3 மடங்காக அதிகரித்துள்ளது. இதில் சென்னையில் மட்டும் 3,114 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த அளவு சென்னையில் கொரோனா பாதிப்பு உயர்ந்ததற்கு காரணம் சென்னை கோயம்பேடு மார்க்கெட் உடன் தொடர்பு உடையவர்கள் மூலமாக பரவியதே என கூறப்படுகிறது.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு புதிதாக 798 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 8002 ஆக உயர்ந்துள்ளது.


Advertisement