இன்றுமட்டும் தமிழகத்தில் கொரோனாவுக்கு இத்தனை பேர் பாதிப்பா..? பலி எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா.?



Corona increased in tamilnadu

கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்திலும், கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை மற்றும் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,871 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,14,520 ஆக அதிகரித்துள்ளது.

corona

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் இன்று 993 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,12,059 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று 119 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இந்தநிலையில் இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,278 ஆக அதிகரித்துள்ளது.