தமிழகம் Covid-19

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 646 பேருக்கு கொரோனா பாதிப்பு! சென்னையில் மட்டும் எவ்வளவு?

Summary:

corona increased in tamilnadu

உலகத்தையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ், உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அசுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.  இதுவரை உலக அளவில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 55,88, 020 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,47, 872 ஆக உயர்ந்துள்ளது. இந்த கொடூர வைரஸின் பரவல் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

கொரோனாவை கட்டுப்படுத்த நான்காவது கட்டமாக இந்த மாதம் இறுதிவரை ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் கொரோனா பரவலின் எண்ணிக்கையும், கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணம் உள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு நீடித்தும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் கட்டுக்குள் வந்தபாடில்லை. 

தமிழகத்தில் சென்னையில் தான், கொரோனா பாதிப்பு அதிகமாக பரவி வருகிறது.  நாட்டிலேயே அதிகமாக பரிசோதனை செய்யும் மாநிலமான தமிழகம், கொரோனா பாதிப்பில் 2-வது இடத்தில் உள்ளது. தமிழக அரசும் கொரோனவை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 646 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 17728-ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் இதுவரை மொத்தம் 127 பேர் உயிரிழந்திருக்கின்றனர். சென்னையில் மட்டும் 509-பேருக்கு இன்று கொரோனா உறுதியாகியிருக்கிறது.  இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 11,640 ஆக உயர்ந்துள்ளது.


Advertisement