தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகரித்த கொரோனா பாதிப்பு! ஒரே நாளில் 63 பேர் பலி!

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகரித்த கொரோனா பாதிப்பு! ஒரே நாளில் 63 பேர் பலி!


corona-increased-in-tamilnadu-9hz9rm


கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்திலும்,கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை மற்றும் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 
 
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3882 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதனால், பாதிப்பு எண்ணிக்கை 94049 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கடந்த 25ம் தேதி முதல் 3,509, 3,645, 3,713, 3940, 3949, 3,943 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்தது. இதனால், பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

corona

தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு ஒரே நாளில் 63 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 1,201ல் இருந்து 1,264 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 2,182 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் சென்னையில் மொத்த பாதிப்பு 60,533 ஆக அதிகரித்துள்ளது.