தமிழகம் Covid-19

சென்னைக்கு அடுத்தபடியாக புதிய உச்சத்தை தொடும் மதுரை! நேற்று ஒரேநாளில் 300 பேருக்கு கொரோனா!

Summary:

corona increased in tamilnadu

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர்,செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ,மதுரை போன்ற மாவட்டங்களில் கொரோனாவால்  பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அங்கு முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 3,940 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82,275 உயர்ந்து உள்ளது. 

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் வயது வித்தியாசம் இல்லாமல் தாக்கி வருகிறது. மதுரையில் இதுவரை இல்லாத வகையில் நேற்று அதிகபட்சமாக ஒரே நாளில் 300 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் தூங்கா நகர மக்கள் துயரத்தை அனுபவித்து வருகின்றனர். மதுரையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,003ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்திலே 20-ஆவது இடத்தில் இருந்த மதுரையில் கொரோனா வேகமாக பரவுகிறது. நேற்று காஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்டங்களை பின்னுக்குத்தள்ளி, முதல் மூன்று இடத்திலுள்ள சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்கள் வரிசையில் 4வது இடத்தில் மதுரை உள்ளது.


Advertisement