தமிழகம் Covid-19

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு புதிதாக 2,532 பேருக்கு கொரோனா பாதிப்பு! சென்னையில் மட்டும் எவ்வளவு?

Summary:

corona increased in tamilnadu


தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்திலே சென்னையில்தான் கொரோனா பரவலின் வேகம் மிக அதிகமாக உள்ளது. இதனால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு இந்த மாதம் இறுதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இதுவரை இல்லாத அளவிற்கு தமிழகத்தில் 2,532 பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது.

இந்தநிலையில் தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 59,377 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 53 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்தநிலையில் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 757 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் 1,493 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை சென்னையில் மட்டும் 601 பேர் இறந்துள்ளனர்.

நேற்றுமட்டும் செங்கல்பட்டில் 121 பேருக்கும், கடலூரில் 90 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 64 பேருக்கும், மதுரையில் 68 பேருக்கும், திருவள்ளூரில் 120 பேருக்கும், திருவண்ணாமலையில் 76 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவில் இருந்து நேற்று 1,438 பேர் குணம் அடைந்தனர். இதுவரையில் 32,754 பேர் குணமடைந்துள்ளனர். சிகிச்சையில் 25,863 பேர் உள்ளனர். 


Advertisement