மகிழ்ச்சியான செய்தி.! தமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா.! ஆனால் அதிகரித்த பலி எண்ணிக்கை.!corona increased in tamilnadu

உலகத்தையே உலுக்கிவரும் கொரோனா வைரஸ் கடந்த ஓராண்டுக்கும் மேலாக கடுமையான பாதிப்பையும், உயிரிழப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது. நாடு முழுவதும் கொரோனா பரவலின் 2வது அலை தீவிரமாக பரவி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. 

தமிழகத்திலும் கொரோனா பாதிப்பினால் நாள்தோறும் பல ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டும், 400 க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தும் வருகின்றனர். இந்தநிலையில், தமிழகத்தில்  கடந்த 24 மணி நேரத்தில் 28,864 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த பத்து நாட்களாக குறைந்து வருகிறது. 

corona

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 493 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தின் தலைநகர் சென்னையில், கடந்த 24 மணி நேரத்தில் 2,689 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்திலே அதிகப்படியாக கோவையில் மட்டும் 3537 பேருக்கு பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.