தமிழகம் Covid-19

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு! நேற்று ஒருநாள் மட்டும் எவ்வளவு?

Summary:

Corona increased in tamilnadu

தமிழகத்தில் நேற்று குழந்தை உள்பட மேலும் 231 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவ தொடங்கியதால், இந்தியா முழுவதும் மார்ச் 24 நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.  ஆனாலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இந்தியாவில் ஊரடங்கு மே 17ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சென்னையில் கொரோனா வைரசின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்று 231 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 37 பேர் முதன்மை நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2,757 ஆக உயர்ந்துள்ளது. 


Advertisement