தமிழகம் Covid-19

மதுரை மாவட்டத்தில் வேகமாக பரவும் கொரோனா.! இன்று ஒரே நாளில் 270 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

Summary:

corona increased in madurai

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், பலியானவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் அதிகபட்ச அளவாக 4,329 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதனால், பாதிப்பு எண்ணிக்கை 1,02,721 ஆக உயர்ந்துள்ளது.  சென்னையில் இன்று மட்டும் 2,082 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் ஏற்கனவே 3,133 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 270 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,403 ஆக உயர்ந்துள்ளது. 

மதுரை மாவட்டத்தில் இதுவரை 887 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 43 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தநிலையில் மதுரை மாவட்டம் முழுவதும் ஜூலை 5 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் உள்ளது.
 


Advertisement