தமிழகம் Covid-19

சென்னையில் தீவிரமாக பரவி வரும் கொரோனா! மக்களே உஷார்!

Summary:

Corona increased in chennai

சீனாவின் உகான் நகரில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவ தொடங்கியதால், இந்தியா முழுவதும் மே 17 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சென்னையில் கொரோனா வைரசின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் சென்னையில் 174 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சென்னையை சேர்ந்த 76 வயது பெண் ஒருவரும் உயிரிழந்தார்.

சென்னையில் இதுவரை 1,257 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில், தமிழகத்தில் நேற்று 231 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று சென்னையில் 3½ வயது ஆண் குழந்தை உட்பட 6 குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் சென்னையில் மட்டுமே கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதானால் சென்னையில் உள்ள மக்கள் மிகவும் உஷாராக இருக்கவேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது. சென்னையில் முழு ஊரடங்கை அனைவரும் கடுமையாக கடைபிடித்தால் மட்டுமே கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும்.

இதுவரை தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2,757 ஆக உயர்ந்துள்ளது. எனவே தமிழக மக்கள் அனைவரும் சமூக விலகலை கடைபிடித்தால் மட்டுமே கொரோனாவை தமிழகத்தில் இருந்து விரட்ட முடியும். எனவே தமிழக மக்கள் விழிப்புடன் செயல்படுவோம். 


Advertisement