முதன்முறையாக தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகரித்த கொரோனா பாதிப்பு! சென்னையில் மட்டும் 1,834 பேருக்கு கொரோனா!

corona in tamilnadu


corona in tamilnadu

கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்திலும்,கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை மற்றும் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இன்று இதுவரை இல்லாத அளவிற்கு முதன்முறையாக கொரோனா தொற்று 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது.  

இன்று தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு 3,509 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 70,977 ஆக உயர்ந்துள்ளது. இன்று 45 பேர் உயிரிழந்துள்ள நிலையில், தமிழகத்தில் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 911 ஆக அதிகரித்துள்ளது.

corona

சென்னையில் மட்டும் இன்று 1,834 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 47,650 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை சென்னையில் மட்டும்  694 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் இன்று 2,236 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலமாக கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 39,999 ஆக அதிகரித்துள்ளது.