தமிழகம்

மகிழ்ச்சியான செய்தி... தமிழகத்தில் குறைந்துவரும் கொரோனா பரவல்.! கடந்த 24 மணி நேரத்தில் பாதிப்பு எவ்வளவு தெரியுமா.?

Summary:

மகிழ்ச்சியான செய்தி... தமிழகத்தில் குறைந்துவரும் கொரோனா பரவல்.! கடந்த 24 மணி நேரத்தில் பாதிப்பு எவ்வளவு தெரியுமா.?

உலகத்தையே அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவி அடுத்தடுத்த அலைகளாக நீடித்து வந்தது. இந்தியாவில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு நீடித்து வருகிறது. தமிழகத்தில் ஓரளவிற்கு கட்டுக்குள் வந்த கொரோனா பரவல் கடந்த ஜனவரி மாதம் மீண்டும் வேகமெடுக்க துவங்கியது. 

இந்தநிலையில் தமிழ்நாடு முழுவதும் ஜனவரி 6 ஆம் தேதி முதல் இரவுநேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அறிவிக்கப்பட்டது. பின்னர் கொரோனா பரவல் ஓரளவிற்கு குறையத் துவங்கியவுடன் மீண்டும் ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டது.

இந்தநிலையில், தமிழகத்தில் நேற்று மட்டும் புதிதாக 5,104 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டது. நேற்று முன்தினம் தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு  6,120 இருந்தநிலையில் நேற்று 5,104 ஆக குறைந்துள்ளது. சென்னையில் மட்டும்  839 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. நேற்றுமட்டும் 13 பேர் உயிரிழந்தனர்.


Advertisement