தமிழகம் Covid-19

தமிழகத்தில் படிப்படியாக குறைந்துவரும் கொரோனா பாதிப்பு! நேற்று ஒரு நாள் மட்டும் எவ்வளவு.?

Summary:

Corona decreased in tamilnadu

தமிழகத்தில் கொரோனா வைரசால் 1,629 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33-ஆக குறைந்துள்ளது.

சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ், உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. உலகத்தையே உலுக்கி வரும் கொரோனா இந்தியாவிலும் பரவி, நாளுக்கு நாள் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த பிரதமர் மோடி நாடுமுழுவதும் ஊரடங்கை மே மாதம் 3-ந்தேதிவரை மேலும் 19 நாட்கள் நீட்டிப்பதாக பிரதமர் அறிவித்தார்.

ஆனாலும் இந்தியாவில், கொரோனா வைரஸ் தாக்கியவர்களின் எண்ணிக்கை 20,400-ஐ கடந்து சென்று கொண்டிருக் கிறது. தமிழகத்திலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. ஆனாலும், இந்திய அளவில் மகாராஷ்டிரா மாநிலம் முதல் இடத்திலும், குஜராத் 2-வது இடத்திலும், டெல்லி 3-வது இடத்திலும் இருந்து வருகிறது. இதைத்தொடர்ந்து ராஜஸ்தான் 4-வது இடத்திலும், தமிழகம் கொரோனா பாதிப்பில் 5-வது இடத்தில் இருந்து வருகிறது.

இந்தநிலையில் தமிழகத்தில் நேற்று கொரோனா வைரசால் 33 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,629 ஆக உயர்ந்துள்ளது. ஆனாலும் ஒரே நாளில் கொரோனா பரவுதல் எண்ணிக்கை குறைய தொடங்கியுள்ளது. இதற்க்கு முக்கிய காரணம் ஊரடங்கை பொதுமக்கள் கடுமையாக கடைப்பிடப்பதே என கூறப்படுகிறது.


Advertisement