மதுரையில் கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா! இன்று ஒரேநாளில் 12 பேர் உயிரிழப்பு!

Corona death increased in madurai


Corona death increased in madurai

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்ததால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் கடந்த 19ஆம் தேதி முதல் வரும் 30ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. 

இதனையடுத்து சென்னையில் இருந்து பலர் சொந்த ஊரான தென்மாவட்டங்களை நோக்கி படையெடுத்தனர். இதனால் மதுரையில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வரும் பாதிப்பு எண்ணிக்கையால், நேற்று (ஜூன் 24) முதல் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஆனாலும், தொற்று அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

corona

நேற்று வரையில் மதுரையில் 1073 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, 9 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இன்று ஒரே நாளில் புதிதாக 152 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மதுரையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,225 ஆக அதிகரித்துள்ளது. 

மேலும், மதுரை அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த 12 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். மதுரையில் இதுவரை மொத்தமே 9 பேர் மட்டுமே பலியான நிலையில், இன்று ஒரே நாளில் 12 பேர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.