தமிழகம் மருத்துவம்

மூடப்படும் பல்பொருள் அங்காடிகள்! பொதுமக்கள் இதெல்லாம் அவசியம் வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்!

Summary:

corona awareness

சீனாவில் தொடங்கிய கொரோனோ வைரஸ் இன்று உலகின் பல நாடுகளிலும் பரவி உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது. தற்போது இந்தியாவில் மிக வேகமாக பரவி வருகிறது. இதுவரை இந்நோயால் 150க்கும் மேற்ப்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸை தடுப்பதற்கு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது. நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள், வணிக வளாகங்கள் மற்றும் பொது மக்கள் அதிகம் கூடும் இடங்கள் மூடப்பட்டுள்ளன. அதேபோல் மக்களும் வெளிப்பயணகளை தவிர்க்கவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பல்பொருள் அங்காடிகள் அடைக்கப்பட்டதால் பொதுமக்கள் வீட்டிற்கு பொருட்களை வாங்கி வைப்பதற்கு கடைகளில் அலைமோதுகின்றனர். கடையடைப்பால் பொதுமக்கள் யாரும் அச்சப்படவேண்டாம். பொதுமக்கள் ஒன்றுகூடுவதை தவிர்க்கத்தான் இந்த தற்காலிக கடையடைப்பு. வீட்டிற்கு தேவையான அத்யாவசிய பொருட்களை மட்டும் வீட்டில் வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்.

தினம் தினம் கடைக்கு சென்று பொருட்களை வாங்கும் பழக்கத்தை கொரோனா ஒழியும்வரை தவிர்ப்போம். கடைகள் மூடப்படுகிறது என யாரும் அச்சப்படவேண்டாம். இது கொரோனா பரவுவதை தடுப்பதற்காக தற்காலிகம் தான். பத்து நாட்களுக்கு தேவையான அரிசி பருப்புகளை வீட்டில் வாங்கி வைத்துக்கொண்டால் தேவையில்லாமல் அடிக்கடி வெளியில் செல்வதை தவிர்க்கலாம்.


Advertisement