கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க முயன்ற அதிகாரி பரிதாப பலி!

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க முயன்ற அதிகாரி பரிதாப பலி!



Corona antibiotics tester died

சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பேரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை கொரோனா நோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், பல நாடுகளும் கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தநிலையில், சென்னை பெருங்குடி பகுதியை சேர்ந்த சிவனேசன் என்பவர்  கடந்த 27 ஆண்டுகளாக உத்தரகாண்ட் மாநிலம் காசிப்பூரில் உள்ள ஒரு தனியார் ‘பயோடெக்’ நிறுவனத்தில் மேலாளராக வேலை செய்து வந்தார். இவர் சளி மருந்து உள்பட பல்வேறு மருந்துகள் கண்டுபிடிப்பில் முக்கிய பங்கு வகித்தவர் என்று கூறப்படுகிறது.

corona
இந்நிலையில், கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் சிவனேசன் ஈடுபட்டுள்ளார். இதற்கான சோடியம் நைட்ரேட் கலந்த ஒரு மருந்தை உருவாக்கி உள்ளார். இதனையடுத்து கடந்த வியாழக்கிழமை அந்த மருந்தை நிறுவன உரிமையாளருக்கு முதலில் கொடுத்து சோதனை செய்துள்ளனர். அதனை குடித்த உரிமையாளர் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்துள்ளார். ஆனால், 10 நிமிடங்களில் அவர் சுய நினைவுக்கு திரும்பியுள்ளார்.

 

இதனால் எந்த பக்கவிளைவும் ஏற்படாது, மருந்தை பயன்படுத்தலாம் என்ற நம்பிக்கை வந்துள்ளது. சிவனேசனும் மருந்தை உட்கொண்டுள்ளார். அவரும் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார். ஆனால் அவர் மயக்க நிலையில் இருந்து மீளவில்லை. உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக மற்றொரு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சிவனேசன் உயிரிழந்தார். 

கொரோனா மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் மருந்தாளுனர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் குறித்து தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.