தமிழகம் Covid-19

தமிழகத்தில் ஒரே நாளில் 6 குழந்தைகளுக்கு கொரோனா! தமிழகத்தின் தற்போதைய நிலை!

Summary:

Corona affected in tamilnadu

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,885 ஆக உயர்ந்துள்ளது. 12 வயதுக்கு உட்பட்ட 6 குழந்தைகள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சீனாவில் ஆரம்பித்த கொரோனா உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது. உலகத்தையே உலுக்கி வரும் கொரோனா இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேபோல் தமிழகத்திலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 64 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சென்னையில் மட்டும் 28 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதித்தோரின் எண்ணிக்கை 1,885 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தமிழக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 60 பேர் சிகிச்சை முடிந்து, குணமடைந்து ‘வீட்டிற்கு சென்றுள்ளனர்.

தமிழகத்தில் 12 வயதுக்கு உட்பட்ட 6 குழந்தைகள் உட்பட 64 பேர் நேற்று பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில், 30 மாவட்டங்கள் அதிக பாதிப்பு உடைய மாவட்டமாகவும், 7 மாவட்டங்கள் மிதமான பாதிப்பு உடைய மாவட்டமாகவும், 1 மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு இல்லை என்பதால் பச்சை மாவட்டமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 


Advertisement