சென்னை மாநகராட்சியில் மட்டும் கொரோனா பாதிப்பு எவ்வளவு.? உயிரிழப்பு எவ்வளவு?

சென்னை மாநகராட்சியில் மட்டும் கொரோனா பாதிப்பு எவ்வளவு.? உயிரிழப்பு எவ்வளவு?


corona-affected-in-chennai

சென்னையில் இதுவரை மொத்தம் 452 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனாவால், இந்தியாவில் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தபட்டுள்ளது. தமிழகத்திலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக சுகாதாரத்துறை தீவிரமாக செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,755 ஆக உயர்ந்துள்ளது.

corona

சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 452 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதில், 11 பேர் உயிரிழந்துள்ள நிலையில், குணமடைந்து உள்ளவர்கள் எண்ணிக்கை 130 ஆக உயர்ந்துள்ளது. 

ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு ஒரு மாதம் ஆகிவிட்ட போதிலும் கொரோனா பரவுவதை தடுக்க முடியவில்லை. ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி மக்கள் பல இடங்களில் வெளியே நடமாடுவதும், பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் நடந்து கொள்வதுமே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

சென்னையில் மட்டும் கொரோனா தொற்று பாதித்தவர்களில் ஆண்கள் 65.19% பேரும், பெண்கள் 34.81% பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.