தமிழகம் Covid-19

சசிகலா இருக்கும் சிறையில் 26 பேருக்கு கொரோனா! சசிகலாவுக்கு பீதியை ஏற்படுத்திய செய்தி!

Summary:

corona affected in bengaluru jail

கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்தும் பணிகளில் அரசு தீவிரமாக ஈடுபட்டுவருகிறது.

இந்நிலையில், பரப்பன அக்ரஹாரா சிறைக்கு புதிதாக வந்த கைதிகள் உட்பட, 150 பேரின் திரவ மாதிரி, பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இதில், சிறையின் ஆறு ஊழியர்கள், 20 கைதிகளுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியானது.

சிறையில், 2,000க்கும் அதிகமான ஆண், பெண் கைதிகள் உள்ளனர். நேற்றைய தகவல்படி, ஆண் கைதிகளுக்கு மட்டுமே தொற்று தாக்கியதாக கூறப்படுகிறது. இந்தநிலையில், புதிதாக வரும் கைதிகளை, 21 நாட்கள் தனிமையில் வைத்து, எந்த அறிகுறியும் இல்லை என்றால் மட்டுமே சிறையில் அடைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண் கைதிகளின் சிறைக்குப் பக்கத்தில் தான், சசிகலா உட்பட பெண் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதனால், சசிகலா உட்பட அனைவருமே பீதியில் உள்ளனர்.


Advertisement