தமிழகம்

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு 500 கோடி நிதி ஒதுக்கீடு! முதல்வர் அறிவிப்பு.

Summary:

Corona

சீனாவில் உஹான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனோ வைரஸ் கோர தாண்டவம் இன்று பல நாடுகளிலும் பரவி வருகிறது. தற்போது இந்நோய் இந்தியாவிலும் மிக வேகமாக பரவி வருகிறது. இந்நோயை கட்டுப்படுத்த அந்த மாநிலங்களில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி தமிழகத்தில் நாளை மாலை 6 மணி முதல் மார்ச் 31ம் தேதி வரை அனைத்து மாவட்டத்தில் எல்லை பகுதிகள் மூடி 144 நடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அத்தியாவசிய பொருட்களின் வாகனங்கள் மட்டும் சென்று வர அனுமதிக்கப்பட்டுள்ளது. 

மேலும் கொரோனா வைரஸ் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளில் போதிய வதிகள் செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி இதுவரை கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக 60 கோடி நீதி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கூடுதலாக 500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் முதல்வர் அறிவித்துள்ளார். 


Advertisement