தமிழகம்

சென்னையில் மீண்டும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு! அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு.

Summary:

Corona

டெல்லியிலிருந்து சென்னை திரும்பிய நபர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்ப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இன்று உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு தமிழக அரசு மார்ச் 31 ஆம் தேதி வரை விடுமுறை அறிவித்துள்ளது. மேலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களான திரையரங்குகள், வணிக வளாகங்கள், பொழுது போக்கு தளங்கள் அனைத்தும் மூடவேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் அங்கங்கே கொரோனா வைரஸ் குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. மேலும் இதற்கு முன்பு ஏற்கனவே ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தார்.

தற்போது டெல்லியிலிருந்து சென்னை திரும்பிய மற்றொரு நபருக்கு கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது. அவரை சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில் தனி பிரிவில் சிகிச்சை செய்து வருகின்றனர். இது குறித்து தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 


Advertisement