
Summary:
Corona
சீனாவில் உஹான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனோ வைரஸ் கோர தாண்டவம் இன்று பல நாடுகளிலும் பரவி வருகிறது. இதுவரை இந்நோயால் 10,000க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது இந்தியாவிலும் இந்நோய் வேகமாக பரவி வருகிறது. இதுவரை இந்நோயால் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் எப்போதும் அதிக பக்தர்களை கொண்டு விளங்கும் உலக புகழ்பெற்ற கிறிஸ்தவர்களின் முக்கிய வழிபாட்டு தளமான வேளாங்கண்ணி பேராலயம் கொரோனா அச்சத்தால் மூடப்பட்டுள்ளது. மேலும் தினமும் வழக்கமாக நடைபெறும் திருப்பலிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement