தமிழகம்

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை மையங்கள் எங்கெங்கு உள்ளது தெரியுமா?

Summary:

Corona

இந்தியாவில் மிக வேகமாக பரவி வரும் கொரோனா நோயை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி நேற்று இந்தியா முழுவதும் சுய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது இந்நோயை கட்டுப்படுத்த இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட கொரோனா பரிசோதனை மையங்களின் பட்டியலை இந்திய மருத்துவ கவுன்சில் வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியா முழுவதும் 87 பரிசோதனை மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

அதுமட்டுமின்றி இன்னும் 27 பரிசோதனை மையங்கள் திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில் தமிழகத்தில் மட்டும் 7 பரிசோதனை மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

1.கிங் இன்ஸ்டிடியூட் ஆஃப் ப்ரீவென்டிவ் மெடிசின் & ரிசர்ச், சென்னை

2.சென்னை மருத்துவக்கல்லூரி

3.தேனி அரசு மருத்துக்கல்லூரி

4.திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி

5.திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி

6.குமாரமங்கலம் அரசு மருத்துவக்கல்லூரி சேலம்

7.கோவை மருத்துவக்கல்லூரி

 


Advertisement