தமிழகம்

யாருக்கெல்லாம் கொரோனா சோதனை செய்ய வேண்டும்.. அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்!

Summary:

Corona

சீனாவின் உஹான் மாகாணத்தில் உருவான கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுதும் வேகமாக பரவி வருகிறது. இதுவரை இந்நோயால் 10,000க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்நோயால் தற்போது இந்தியாவிலும் பரவி வருகிறது.

இதனால் அரசு மக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வுகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நேற்று இந்திய பிரதமர் மோடி கூட மக்கள் அதிகம் கூடும் இடங்களை தவிர்த்து வீட்டிலேயே இருக்கும் படி மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார். மேலும் இந்நோய் குறித்து யாரும் அச்சப்பட வேண்டாம் எனவும் கூறியிருந்தார்.

அதுமட்டுமின்றி வரும் ஞாயிற்றுக்கிழமை யாரும் வீட்டை விட்டு வெளியேறாமல் தனக்கு தானே ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து கொள்ளுமாறும் கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் யார் யார் எல்லாம் கொரோனா சோதனை செய்ய வேண்டும் என்று கூறி புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் சதாரண காய்ச்சல், இருமல் உள்ளவர்கள் மருத்துவமனைக்கு சென்று சோதனை செய்ய வேண்டிய தேவையில்லை. கடந்த 14 நாட்களுக்கு முன்பு கொரோனா பாதிக்கப்பட்ட வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு நாடு திரும்பியவர்களுக்கு காய்ச்சல், தலைவலி, இருமல், மூச்சு திணறல் போன்ற அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை சென்று பார்க்கலாம் என கூறியுள்ளார்.


Advertisement