ஆசையாக அழைத்து பேன்டீன் ஷாம்பு கொடுத்த வைரமுத்து - புயலை கிளப்பிய பாடகி சுசித்ரா.!
சிறை கைதிகளுக்கு தாம்பத்திய உரிமை... உயர் நீதிமன்ற நீதிபதி அதிரடி கருத்து.!
சிறை கைதிகளுக்கு தாம்பத்ய உரிமை வழங்குவதற்கு திட்டத்தை செயல்படுத்துவது குறித்து தமிழக அரசு பரிசீலிக்கும்படி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியம் பரிந்துரைத்திருக்கிறார்.
திருவள்ளூர் மாவட்டத்தின் பொறுப்பு நீதிபதியும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியான எஸ் எம் சுப்பிரமணியம் இன்று புழல் சிறையில் திடீர் சோதனை நடத்தினார். சிறை கைதிகளின் நலன் தொடர்பாகவும் அவர்களுக்கு வழங்கப்படும் வசதிகள் குறித்தும் இந்த சோதனையின் போது கேட்டறிந்தார்.
மேலும் சிறை கைதிகளுடன் வளரும் குழந்தைகளுக்கு சத்தான உணவு வழங்குவது குறித்தும் குழந்தைகள் படிப்பதற்காக மழலைப் பள்ளிக்கூடம் வழங்குவது தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது சிறைக் கைதிகளுக்கு வெளிநாடுகளில் இருப்பது போன்று தாம்பத்திய உரிமை வழங்குவதற்கு பரிசீலிக்கும்படி தமிழக அரசை கேட்டுக் கொண்டார்.
சிறையில் பிணையை வழங்கப்பட்டும் ஜாமீன் தொகை செலுத்த முடியாமல் சிறையிலேயே இருக்கும் கைதிகளை விடுதலை செய்வதற்கும் வலியுறுத்தினார். திரை கைதிகளுக்கு தாம்பத்திய உரிமை வழங்குவதன் மூலம் அது அவர்களது மன அழுத்தத்தை குறைப்பதற்கு வழி வகுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.