தமிழகம்

வேறொரு நபருடன் சிரித்து பேசிய காதலி! என்ஜினீயரிங் மாணவர் எடுத்த விபரீத முடிவு! அதிர்ச்சி சம்பவம்!

Summary:

college student suicide for lover

சென்னை மணலி பகுதியைச் சேர்ந்த நடராஜன் என்ற இளைஞர் தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இந்தநிலையில் கொரோனவால் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால் வீட்டிலே இருந்த நடராஜன், நேற்றுமுன்தினம் இரவு வீட்டில் தனது அறைக்குள் வழக்கம் போல தூங்க சென்றுள்ளார். ஆனால் நேற்று காலை நீண்டநேரம் ஆகியும் நடராஜன், அறையில் இருந்து வெளியே வரவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த நடராஜனின் பெற்றோர், கதவை உடைத்து திறந்து பார்த்தபோது பேரதிர்ச்சி அடைந்தனர். நடராஜன், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனைப்பார்த்த அவரது பெற்றோர் கதறி அழுதுள்ளனர். இதனையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், தூக்கில் தொங்கிய நடராஜன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், நடராஜன், தன்னுடன் படிக்கும் மாணவி ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த பெண், வேறு ஒரு மாணவரிடம் சிரித்து பேசி பழகி உள்ளார். இதை பார்த்த நடராஜன், மனமுடைந்து தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். இளைஞரின் மரணம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


Advertisement