கர்ப்பமாக்கி விட்டு திருமணம் செய்ய மறுத்த காதலன்.! பின்னர் நடந்த அதிர்ச்சி சம்பவம்.!College student suicide

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள டி.குன்னத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் குமரவேல். இவருடைய மகள் நர்மதா. இவர்  தனியார் கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வந்துள்ளார். தந்தை இறந்துவிட்டதால் நர்மதா தனது தாய் ஜோதியுடன்  பாட்டி வீட்டில் வசித்து வந்துள்ளார். 

இந்தநிலையில், நர்மதாவுக்கும், ஏனாதிமங்கலத்தை சேர்ந்த நித்தியானந்தன்(24) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இந்தநிலையில் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி வந்தனர். அப்போது திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி நர்மதாவிடம் அவர் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதில் நர்மதா கர்ப்பமானார். 

suicideநர்மதா கர்ப்பமானதையறிந்த நர்மதாவின் உறவினர்கள் நித்தியானந்தன் வீட்டிற்கு சென்று நர்மதாவை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளனர். ஆனால் அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் வேறு வழியின்றி நர்மதாவின் கருவை உறவினர்கள் கலைத்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த நர்மதா வீட்டில் தூக்குப்போட்டு் கொண்டார். இதை பார்த்த அவரது உறவினர்கள், நர்மதாவை மீட்டு சிகிச்சைக்காக விழுப்புரம் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நர்மதா இறந்தார். நர்மதா எழுதி வைத்திருந்த கடிதம் போலீசாரிடம் சிக்கியது. அதில், எனது சாவிற்கு நித்தியானந்தன் தான் காரணம் என்று எழுதியுள்ளார். அதனை கைப்பற்றிய போலீசார் நித்தியானந்தன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.