தமிழகம்

தாயுடன் வீட்டிற்கு சென்ற கல்லூரி மாணவன்.! எமன் போல் வந்த கன்டெய்னர் லாரி.! தாய் கண் முன்னே நடந்த துயரச்சம்பவம்.!

Summary:

திருச்சி மாவட்டம், பீமநகரை சேர்ந்தவர் கணேஷ் என்பவரின் மகன் ஜெகதீஸ்வரன் தனியார் பொறியியல் க

திருச்சி மாவட்டம், பீமநகரை சேர்ந்தவர் கணேஷ் என்பவரின் மகன் ஜெகதீஸ்வரன் தனியார் பொறியியல் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கணேஷ் மனைவி தேவசேனா மதுரையில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்தநிலையில் தனது தாயை வீட்டிற்கு அழைத்து வருவதற்காக ஜெகதீஸ்வரன் காரில் மதுரைக்கு சென்றுள்ளார்.

பின்னர் தனது தாயை அழைத்துக்கொண்டு காரில் திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை குறிச்சிப்பட்டி பிரிவு சாலை அருகே வந்த போது முன்னால் சென்ற கன்டெய்னர் லாரியின் பின்புறத்தில் ஜெகதீஸ்வரன் ஓட்டி வந்த கார் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் காரில் இருந்த இருவரும் பலத்த காயம் அடைந்தனர். அந்த விபத்தில் ஜெகதீஸ்வரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஜெகதீஸ்வரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த ஜெகதீஸ்வரனின் தாய் தேவசேனாவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தாய் கண் முன்னரே மகன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


Advertisement