தமிழகம்

பிறந்தநாள் கொண்டாட்டம்.. 8 வது மாடியில் இருந்து தவறி விழுந்த இளைஞர்..!! சமூக வலைதளத்தில் வைரலாகிய சிசிடிவி காட்சிகள்.!!

Summary:

8 வது மாடியில் இருந்து தவறி விழுந்த இளைஞர்..!! சமூக வலைதளத்தில் வைரலாகிய சிசிடிவி காட்சிகள்.!!

ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்தவர் நவீன்குமார்(வயது 21). இவர் செம்பரம்பாக்கத்தில் உள்ள 18 மாடி கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில்  தங்கி, ஸ்ரீபெரும்பதூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் பி.டெக் பயோமெடிக்கல் 4 ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில்  கடந்த 16ஆம் தேதி தனது நண்பரின் பிறந்த நாள் என்பதால், அன்று இரவு 8 வது மாடியில் உள்ள நண்பரின் அறைக்குச் சென்று பிறந்த நாள் கொண்டாடிவிட்டு, இவருடன் இருந்த சக நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தி பிறந்தநாளை நிறைவு செய்தனர்.

பின்னர் இரவு நேரமாகிய பிறகு எல்லோரும் தூங்கச் சென்றுள்ளனர். அப்போது நவீன் குமார் அறையின் சாவி, அவருடன் தங்கியிருந்த மற்றொரு நண்பரிடம் இருந்ததால், 8 வது மாடியின் பின்புறம் உள்ள பைப்பை பிடித்துக் கொண்டு, அவர் தங்கியிருந்த அறைக்குள் பின்பக்கம் வழியாக சென்றுவிடலாம் என்று எண்ணி இறங்கிய போது நிலை தடுமாறி கீழே விழுந்து பரிதாபமாக சம்பவ இடத்திலே உயிரிழந்து விட்டார். 

நவீன் குமார், மதுபோதையில் பைப்பை பிடித்து இறங்கிய போது நிலைதடுமாறி கீழே விழுந்த சிசிடிவி காட்சிகள் தற்பொழுது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement