தமிழகம்

மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த ஆட்டோ ஓட்டுநர்! பதறிப்போன பெற்றோர்!

Summary:

college girl abused by auto driver


சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேகல்லூரி மாணவியை கடத்திச் சென்று, இளைஞர் ஒருவர் 5 நாட்களாக பாலியல் தொல்லை அளித்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள, பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் மாணவி 5 நாட்களுக்கு முன்பு கல்லூரிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பவில்லை. பெற்றோர்கள் கல்லூரிக்கு வந்து பார்த்தபோதும் அங்கும் மாணவியை காணவில்லை.

இதனையடுத்து மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரித்தபோது, மாணவியை ரமேஷ்குமார் என்ற ஆட்டோ ஓட்டுநர் கடத்திச் சென்றது தெரி‌யவந்தது. 

இதனையடுத்து தலைமறைவாகி இருந்த ரமேஷ் குமாரை கைது செய்த போலீசார், மாணவியையும் மீட்டனர். மாணவியை கடத்திய ரமேஷ்குமார், ஐந்து நாட்களாக அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து குற்றவாளி ரமேஷ்குமாரை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
 


Advertisement