திருமணம் செய்துவைப்பதாக 43 வயது நபரிடம் ரூ.3.5 இலட்சம் ஏமாற்றிய பெண் தரகர்; கோவையில் அதிர்ச்சி சம்பவம்.!

திருமணம் செய்துவைப்பதாக 43 வயது நபரிடம் ரூ.3.5 இலட்சம் ஏமாற்றிய பெண் தரகர்; கோவையில் அதிர்ச்சி சம்பவம்.!


Coimbatore Women Marriage Broker Cheated Man 

 

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கிணத்துக்கடவு, வீரப்ப கவுண்டனூர் பகுதியில் வசித்து வருபவர் தணிகாசலம் (43). இவர் பிட்டராக வேலை பார்த்து வருகிறார். கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், "தனியார் நிறுவனம் ஒன்றில் நான் பிட்டராக வேலை பிர்கிறேன். தற்போது வரை எனக்கு திருமணம் ஆகவில்லை. எனக்கு தங்கை முறை கொண்ட திருப்பூரை சேர்ந்த உமா மகேஸ்வரி என்பவரின் மூலமாக மதுரையை சேர்ந்த திருமண தரகர் தனலட்சுமி என்பவரின் அறிமுகம் ஏற்பட்டது. 

அவரிடம் திருமணம் செய்ய பெண் வரன் பார்க்குமாறு கோரிக்கை வைத்தேன். இதனிடையே, அவர் பெண் ஒருவர் இருப்பதாகவும், தனக்கு கமிஷனாக ரூ.3.5 இலட்சம் பணம் கொடுக்க வேண்டும் என கூறினார். நானும் அதனை வழங்கினேன். இதன்பின், எனக்கும் - 30 வயது பெண்ணுக்கும் அவிநாசி கோவிலில் வைத்து திருமணம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து மணப்பெண் வீட்டிற்கு சென்ற நிலையில், நேற்று மதியம் கோவிலுக்கு செல்ல புறப்பட்டேன். 

அச்சமயம் நான் திருமணம் செய்த பெண்மணி, என்னிடம் தனக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது என்று கூறினார். மேலும், பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் இருந்தபோது, அங்கு வந்த தனலட்சுமி ரூ.20 ஆயிரம் பணம் தருவதாக கோரி அழைத்து வந்து திருமணம் செய்து வைத்ததாகவும் தெரிவித்தார். தனலட்சுமி என்னை மாற்றிவிட்டார். அவரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கூறியுள்ளார். 

இந்த புகாரின் பேரில் அதிகாரிகள் தனலட்சுமிக்கு எதிராக வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.