பிம்பிள் இருக்குற உன்னோட வாழ முடியாது.. மனைவியை ஆபாசமாக படமெடுத்து மிரட்டிய கணவன் குடும்பத்தார்.!Coimbatore Woman Husband torture about Pimple and Nude Video Intimation

முகப்பரு உள்ள உன்னுடன் வாழ இயலாது என மிரட்டிய கணவன், மனைவியை ஆபாச படமெடுத்து தனது குடும்பத்தினருக்கு காண்பித்த பேரதிர்ச்சி கொடூரம் கோவையில் நடந்துள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காந்திபுரத்தில் வசித்து வருபவர் பிச்சைமுத்து (வயது 32). இவர் சாப்ட்வேர் எஞ்சினியர் ஆவார். கோவையில் உள்ள தனியார் வங்கியில் அதிகாரியாக 27 வயது பெண்மணி பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவருக்கும் கடந்த 2020 ஆம் வருடம் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. தம்பதிகளுக்கு திருமணம் ஆகி 2 வருடங்கள் ஆகும் நிலையில், இன்று வரை குழந்தை இல்லை. மேலும், பெண்ணின் முகத்தில் காலநிலை காரணமாக முகப்பரு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. 

இதனால் பிச்சைமுத்து பெண்ணுடன் வாழ மறுத்து தகராறு செய்து இருக்கிறார். மேலும், மனைவியை ஆபாசமாக செல்போனில் படமெடுத்து வைத்த கணவன், அதனை மனைவியிடம் காண்பித்து அடித்து கொடுமை செய்துள்ளான். 

இந்த விசயத்திற்கு கேடுகெட்ட பிச்சைமுத்துவின் தந்தை செல்லத்துரை, தாய் ஜெயலட்சுமி, சகோதரி மகேஸ்வரி, சகோதரன் முத்துக்குமார் ஆகியோரும் உடந்தையாக இருந்து வந்துள்ளனர். மேலும், தனது மனைவியின் ஆபாச படத்தை குடும்பத்தினருக்கும் பிச்சைமுத்து காண்பித்துள்ளான். 

Coimbatore

கணவனின் தாக்குதலால் காயமடைந்த பெண்மணி கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்ட நிலையில், சிகிச்சை முடிந்து தனது பெற்றோரின் வீட்டிற்கு பெண் சென்றுள்ளார். பின்னர், இது தொடர்பாக கோவை மத்திய அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

புகாரை ஏற்ற காவல் துறையினர் 3-க்கும் மேற்பட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து பிச்சைமுத்துவை கைது செய்தனர். மேலும், இந்த கொடூரத்திற்கு உடந்தையாக இருந்த செல்லத்துரை, ஜெயலட்சுமி, மகேஸ்வரி, முத்துக்குமாரின் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ள அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.