பணத்தகராறில் போலி எஸ்ஐ கடத்திக்கொலை: டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் பகீர் செயல்.!

பணத்தகராறில் போலி எஸ்ஐ கடத்திக்கொலை: டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் பகீர் செயல்.!


Coimbatore Travels Company Owner Killed a Man Who Cheating Him 

 

மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் சரவண பாண்டியன். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தெலுங்குபாளையம் பகுதியில் டிராவல்ஸ் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். 

சரவணனிடம் சரவணவேலன் என்பவர் காவல் உதவி ஆய்வாளர் என அறிமுகம் செய்து, வாடகைக்கு கார் எடுத்து சென்றுள்ளார். அவர் போலியான காவலர் என்பது பின்னரே தெரியவந்துள்ளது. 

இதனிடையே, சரவணவேலன் சரவணனிடம் வாடகைக்கு கார் எடுத்து, ரூ.2 ஆயிரம் நோட்டுகளை மாற்றச்செல்கையில் கேரளா காவல் துறையினரால் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

காரின் உரிமையாளர் சரவணன், ரூ.3 இலட்சம் அபராதம் செலுத்தி காரை தமிழகத்திற்கு மீட்டு கொண்டுவந்துள்ளார். இதனிடையே, சிறையில் இருந்து ஜாமினில் வந்த சரவணவேலனிடம் ரூ.3 இலட்சம் பணம் கேட்டு டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் சரவணபாண்டியன் கோரிக்கை வைத்துள்ளார். 

பணத்தை கொடுப்பதாக வாக்குறுதி அளித்த சரவணவேலன், தொடர்ந்து இழுத்தடித்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சரவணபாண்டியன், திருப்பூர் குடிமங்கலம் பகுதியில் இருந்த சரவணவேலனை காரில் கடத்தி இருக்கிறார். 

இந்த கடத்தலுக்கு சரவண பாண்டியனின் ஓட்டுனர்கள் முத்துச்செல்வம், ரித்திக் ஆகியோரும் உதவி இருக்கின்றனர். சரவணவேலன் சத்தம்போட்டபோது, வாயில் துணியை அழுத்தி பொத்தியதாக தெரியவருகிறது. இதனால் மூச்சிரைத்து சரவணவேலன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விஷயம் தொடர்பாக காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அதிகாரிகள் சரவணபாண்டியன், முத்துச்செல்வம், ரித்திக் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.