"ஜாலியா ஜல்சா பணிகிட்டே சொகுசா சுத்தனம்" - காதல் ஜோடியின் உறுதிமொழியை கம்பி வைத்த சிறைக்குள் அடைத்த காவல் துறையினர்.!

"ஜாலியா ஜல்சா பணிகிட்டே சொகுசா சுத்தனம்" - காதல் ஜோடியின் உறுதிமொழியை கம்பி வைத்த சிறைக்குள் அடைத்த காவல் துறையினர்.!


coimbatore-robbery-couple-arrested-by-police

திருட்டு செயலில் ஈடுபட்டு வந்த காதல் ஜோடி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு சிறைக்குள் அடைக்கப்பட்டது. இன்ஸ்டாவில் காதலில் விழுந்து ஊர் மக்களிடம் தர்ம அடி வாங்கிய சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வடவள்ளி, பொம்மனாம்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் பெரிய ராயப்பன். இவரின் மனைவி ராஜம்மாள். தம்பதிகளுக்கு மகன், மகள் இருக்கின்றனர். மகன் சென்னையில் சாப்டவேர் என்ஜினியராக பணியாற்றி வருகிறார். மகள் பெரியநாயக்கன்பாளையத்தில் கணவருடன் இருக்கிறார். இதனால் வயதான தம்பதிகள் இருவரும் தனியாக வீட்டில் வசித்து வருகின்றனர். 

இந்நிலையில், சம்பவத்தன்று மூதாட்டி மருத்துவமனைக்கு சென்றுவிடவே, ராயப்பன் மட்டும் தனியே வீட்டில் இருக்கவே, அதனை நோட்டமிட்ட காதல் ஜோடிகள் மதியம் 2 மணியளவில் தாத்தாவிடம் தண்ணீர் கேட்டுள்ளனர். ராயப்பனும் தண்ணீர் எடுத்துவர வீட்டிற்குள் செல்லவே, ஜோடிகள் அவரை தள்ளிவிட்டு கை, கால்களை கட்டிப்போட்டு வாயில் பிளாஸ்டர் சுற்றியுள்ளது.  

பின்னர், வீட்டை நோட்டமிட்டு நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து வீட்டின் பின்வழியில் தப்பி செல்ல முயற்சித்த நிலையில், எதற்ச்சையாக வீட்டிற்கு வந்த மருமகள் யார் நீங்கள்? வீட்டின் பின் பக்கத்தில் இருந்து வருகிறீர்கள்? என்று கேட்டுள்ளனர். மருமகள் சங்கீதா கேட்ட கேள்விகளுக்கு காதல் ஜோடி முன்னுக்கு பின் முரணாக பதிலளிக்க, சந்தேகமடைந்த சங்கீதா இருவரையும் பிடிக்க முயற்சித்துள்ளார். 

Coimbatore

காதல் ஜோடி சங்கீதாவை தள்ளிவிட்டு தப்பி செல்ல முயற்சிக்கவே, அவரின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் இருவரையும் பிடித்துள்ளனர். இருவருக்கும் ஊர் மக்கள் தர்ம அடி கொடுத்து தடபுடலாக கவனிக்க, சிறப்பான கவனிப்புக்குப்பின் வடவள்ளி காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் இருவரையும் காவல் நிலையம் அழைத்து சென்றனர். 

விசாரணையில், திருச்சியை சேர்ந்த செண்பகவல்லி, கிருஷ்ணகிரியை சேர்ந்த தினேஷ் குமார் என்பது அம்பலமானது. இருவரும் 6 மாதமாக இன்ஸ்டாகிராமில் பழகி காதல் வயப்படவே, சொகுசாக சுற்றிவர ஆசைப்பட்டு கிராம பகுதியை தேர்ந்தெடுத்து புத்தகம் விற்பனை செய்வது போல கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது அம்பலமானது. 

மேலும், பூட்டை உடைத்து திருடுவது எப்படி என யூடியூபை பார்த்து சுத்தி, கயிறு, பிளாஸ்டர், திருப்புளி போன்றவற்றையும் எடுத்து சென்றுள்ளனர். இதனையடுத்து, இவர்களை கைது செய்த காவல் துறையினர் காதல் ஜோடியை பிரித்து சிறையில் அடைத்துள்ளனர். விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.