கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 30 வயது இளம்பெண் கைது: கோவையில் அதிரடி நடவடிக்கை.!

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 30 வயது இளம்பெண் கைது: கோவையில் அதிரடி நடவடிக்கை.!


Coimbatore Pothanur Cannabis Sales Women Arrest 


கோயம்புத்தூர் மாவட்டத்தில் தற்போது கஞ்சா விற்பனையானது அதிகரித்து வருவதால், காவல் துறையினரும் கஞ்சா விற்பனை செய்யும் கும்பலை குறிவைத்து தொடர் தேடுதல் வேட்டை மற்றும் கைது நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், அங்குள்ள போத்தனூர் பகுதியில் இளம்பெண் ஒருவர் கஞ்சா விற்பனை செய்வதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலை அறிந்ததும் மாற்று சீருடையில் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். 

அப்போது பெண்மணி கஞ்சா விற்பனை செய்வது உறுதியாகவே, உடனடியாக அவரை அதிகாரிகள் கைது செய்தனர். விசாரணையில், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண்மணி சுமித்ரா (வயது 30) என்பதும், அவர் கேரளாவை சேர்ந்தவர் என்பதும் உறுதியானது.

விசாரணைக்கு பின்னர் பெண்ணை கைது செய்த காவல் துறையினர், அவரிடம் இருந்த 2 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.