16 வயது மகளிடம் அத்துமீறிய தந்தை.. மனைவி தாய் வீட்டிற்கு சென்றதால் பயங்கரம்.. பதறவைக்கும் சம்பவம்.!



coimbatore-mettupalayam-minor-girl-father-sexual-harass

மனைவி தாய்வீட்டிற்கு சென்ற சமயத்தில் பெற்றெடுத்த மகளிடம் தந்தை பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பயங்கரம் நடந்துள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் பகுதியில் வசித்து வரும் 41 வயது தொழிலாளிக்கு 3 மகள்கள் இருக்கின்றனர். இவரின் இரண்டாவது மகளுக்கு 16 வயது ஆகிறது. அங்குள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு பயின்று வருகிறார். இவரின் முதல் மற்றும் கடைசி மகள் தாத்தா, பாட்டியின் பராமரிப்பில் இருக்கின்றனர். 

இந்த நிலையில், கணவன் மனைவியிடையே அவ்வப்போது குடும்ப தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக ஏற்பட்ட தகராறில் மனைவி கோபமடைந்து தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். சம்பவத்தன்று 16 வயது மகள் வீட்டில் இருந்த நிலையில், சிறுமியின் தந்தை மகளிடம் அத்துமீற முயற்சித்துள்ளார்.

Coimbatore

பாலியல் சீண்டலிலும் ஈடுபட்டு, இதனை யாரிடமும் கூறினால் கொலை செய்திடுவேன் என்று மிரட்டி இருக்கிறார். இதனால் பயந்துபோன சிறுமி சில நாட்கள் அமைதிகாக்க, மேட்டுப்பாளையம் காவல் நிலையத்திற்கு சென்று அதிகாரிகளிடம் நடந்தை கூறி கதறி அழுதுள்ளார். 

சிறுமியின் கண்ணீரை துடைத்து ஆறுதல் தெரிவித்த காவல் துறையினர், தாயாருக்கு தகவலை தெரிவித்து புகார் பெற்றுக்கொண்டனர். பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து சிறுமியின் தந்தையை கைது செய்து சிறையில் அடைத்தனர்.